ETV Bharat / state

போலீஸ் தாக்குதல் - கள்ளக்குறிச்சியில் பெண் உயிரிழப்பு - கள்ளக்குறிச்சி

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின்போது காவல் துறையினர் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி
author img

By

Published : Nov 11, 2019, 8:05 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். அவர் நேற்று மாலை தனது தாய் அய்யம்மாளுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், செந்தில் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால், காவல் துறையினருக்கு பயந்து செந்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் செந்திலை தாக்க முயன்றுள்ளனர். இதில் செந்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துவிட்டார். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த அய்யம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அங்கிருந்த அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செந்தில் உறவினர்கள் அய்யம்மாள் மரணத்திற்கு காவல் துறையினர்தான் காரணம் எனக் கூறியும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Intro:கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின்போது போலீசார் தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.Body:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செந்தில்.

இவர் இன்று மாலை தனது தாய் அய்யம்மாள் உடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் செந்தில் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவரது வாகனத்தை நிறுத்த முயன்று உள்ளனர்.

ஆனால், போலீசாருக்கு பயந்து செந்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த போலீசார் செந்திலை தாக்க முயன்றுள்ளனர். இதில் செந்தில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ஐயம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அங்கிருந்த அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து செந்தில் உறவினர்கள் அய்யம்மாள் மரணத்திற்கு போலீசார் தான் காரணம் எனக் கூறியும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அரசு மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Conclusion:இதற்கிடையே சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட5 பேரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.