விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டநந்தல் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த பகுதியில் கோடை நாள்களில் ஏற்படும் மின்பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 500 மெகாவாட் கொண்ட மின்மாற்றி கடந்த மார்ச் மாதம் வைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்தும் இதுவரை இந்த மின்மாற்றி பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து மின்பற்றாகுறை ஏற்பட்டு, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள் இன்று (ஆக.26) மின்மாற்றியில் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி என போஸ்டரை ஒட்டி மாலை அணிவித்தனர்.
இதையும் படிங்க...இனி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பாட்டு கச்சேரி: இளைஞர்கள் முன்னெடுப்பு!