விழுப்புரம் : கரோனா ஊரடங்கு காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதி முதல் விழுப்புரம்- திருப்பதி இடையிலான ரயில் சேவையைத் மீண்டும் தொடங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது.
இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை ஜூலை 1ஆம் தேதி மாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களும், புதுச்சேரி மக்களும் மிகவும் பயனடைவர். இந்த ரயில் மீண்டும் தினசரி பயணிகள் சேவை ரயில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய குடும்பம்