விழுப்புரம்: பாடம் மட்டுமல்லாமல் பாடத்தோடு சேர்த்து கலை ஆர்வமும் இருந்தால் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள். பனை, தென்னை, விவசாயக்கழிவுகளை கொண்டு கலைப் பொருட்கள் தயாரித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லாசிரியை விருது பெற்ற ஹேமலதா.
கலையால் கல்வி வளர்க்கும் ஆசிரியை: இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்து வருகிறார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து, மாணவர்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடனம், ஓவியம் உள்ளிட்ட பல வழிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக, பள்ளியில் இடைநிற்றல் மாணவர்கள் மற்றும் கல்வியின் மீது அக்கறையைச் செலுத்தாத மாணவர்களிடம் கல்வி ஆர்வத்தினை தூண்டும் விதமாக நெகிழி அல்லாமல் இயற்கை கழிவுப் பொருட்களைக் கொண்டு கலைநயம் மிக்க கலைப்பொருட்களைச் செய்து வருகிறார். இதன் மூலம், மாணவர்களின் மத்தியில் கல்வி மீதான உற்சாகத்தையும் பாடக் கல்வியைத் தவிர்த்து ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இத்தகைய செயல்பாடுகளினால் கல்வியின் தரத்தையும் மேம்படுத்தி வருகிறார்.
இலவச வகுப்புகள்: கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்தபோது, அவர்கள் தங்களுடைய தமிழ் பாடத்தை முழுமையாக கற்கும் வகையில் வரை ஓவியமாக தீட்டி பென்டிரைவுகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். ஆசிரியை ஹேமலதா 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து தான் பணியாற்றும் பள்ளியில் தன்னுடைய பாடம் மட்டுமல்லாது அனைத்து வகுப்பறை பொது பாடப்பிரிவு தேர்வுகளில் மாணவர்கள் முழு தேர்ச்சி விகிதத்தை அடையும் வகையில் உதவி செய்து வருகிறார், ஆசிரியை ஹேமலதா.
பிரதமர் மோடி புகழாரம்: இவருடைய இந்த ஆகச்சிறந்த பணியைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாகப் பேசும் தொடரில் ஆசிரியை ஹேமலதாவைக் குறிப்பிட்டுப் பேசினார். இது பற்றி ஆசிரியை ஹேமலதா கூறும்போது, '30 ஆண்டுகளாகத் தான், ஆசிரியர் பணி செய்து வருவதாகவும் தற்போது செஞ்சி அருகே செ.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், மாணவர்களிடையே கலை ஆர்வத்தைத் தூண்டுவதோடு கல்வியிலும் அவர்களுக்கு அதிக நாட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் தான் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்கொலையை எண்ணத்தையும் மாற்றலாம்: அத்தோடு, பள்ளியில் இடை நிற்றல் மாணவர்களை மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களை வீட்டிலிருந்து அழைத்து வந்து பள்ளியில் கல்வி கற்கச் செய்யும் பெரும்பணியைச் செய்து வருவதாகவும், ஒவ்வொரு மாணவனும் தான் பள்ளிக்கு வரும்பொழுது கையில் என்ன கொண்டு வருகிறார் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
அப்படி எதிர்பார்க்கும் மாணவர்களை ஏமாற்ற நினைக்காமல் தினமும் ஏதாவது ஒரு கலைப்பொருட்களைச் செய்து கொண்டு வந்து மாணவர்களிடம் விளக்கி, அதைப் பாடத்தின் ஊடாக மதிப்பீடு செய்கிறேன் எனவும் இது மட்டுமல்லாமல் சுற்றி இருக்கிற பகுதியில் உள்ளவர்களும் இதுபோன்று இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும்' ஆசிரியை ஹேமலதா தெரிவித்தார்.
குறிப்பாக, மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், அப்படி தற்கொலை செய்து கொள்கிறவர்களை இம்மாதிரியான கலை ஆர்வத்தினால் ஈர்த்து அத்தகைய முடிவில் இருந்து அவர்களை மனம் மாற வைக்க முடியும் என்று உறுதிப்படக் கூறுகிறார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் அணியினருக்கு வீடு வாடகைக்கு கிடையாது - ஹவுஸ் ஓனரின் நூதன கண்டிஷன்