விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா (எ) ராஜா (40). ரவுடியான இவர் விழுப்புரம் கணபதி நகரிலுள்ள, இவரின் சக நண்பரான லாலி கார்த்திக் என்பவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல் துறையினர், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா அவரது நண்பரான லாலி கார்த்திக் வீட்டுக்கு, அவர் இல்லாத நேரத்தில் வருவதும், அவரது மனைவியிடம் தகாத முறையில் பாலியல் ரீதியாக அவருக்குத் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த லாலி கார்த்திக், அவரின் மற்றொரு நண்பரான வினோத் என்பவருடன் சேர்ந்து ராஜாவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கார்த்திக், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சிக்கினான் சைக்கோ கொலையாளி' - காவல் துறை தீவிர விசாரணை!