இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்தப் பெருந்தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு நிகழ்வாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற 31ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாரும் மனு வழங்க வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 340 துணை மின்நிலையங்கள் அமைப்பு