ETV Bharat / state

தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக தொண்டர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்

விழுப்புரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் 38 பேர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்து
author img

By

Published : Mar 29, 2019, 10:54 PM IST

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளரான வடிவேல் ராவணனை ஆதரித்து முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்ய வந்தார். இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்த 38 அதிமுக தொண்டர்கள் மினி லாரியில் விழுப்புரம் வந்தனர். இந்நிலையில் மினிலாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 38 தொண்டர்களும் படுகாயமடைந்தனர்.

பின்னர் அந்த வழியே வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை அமைச்சர் சி.வி சண்முகம் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.