ETV Bharat / state

"ஈகோவை விட்டுவிட்டு மாணவர்களுக்காக செயல்படுங்கள்" - ஆளுநர், அமைச்சருக்கு முன்னாள் துணை வேந்தர் அறிவுரை!

நீட் தேர்வு மிக முக்கியம் என்றும், ஆளுநரும், அமைச்சரும் ஈகோவை விட்டு மாணவர்களுக்காக ஒன்றாக கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர், முன்னாள் துணை வேந்தர், ஆளுநர்
உயர்கல்வித்துறை அமைச்சர், முன்னாள் துணை வேந்தர், ஆளுநர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 6:44 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் இ.பி.ஜி. அறக்கட்டளை சார்பில், "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியால் நடத்தப்படுகிறது. இம்மாநாட்டிற்கு பாலகுருசாமி தலைமை வகித்தார்.

பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்: இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாலகுருசாமி, "சுதந்திரம் அடைந்தும் இன்னும் நம்நாடு வளர்ந்து வரும் நாடாகவே தான் இருக்கிறது. இந்தியா வளர்ந்த நாடக மாறுவதற்கு பொருளாதர முன்னேற்றம் மட்டுமின்றி சமூக முன்னேற்றமும் வேண்டும். பெண்கள் முன்னேற்றம் என்பது மிக மிக அவசியம். அதனை கருத்தில் கொண்டே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என தெரிவித்தார்.

பாலகுருசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதல்முறையாக இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒவ்வொரு வருடமும் இது போன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் முக்கிய நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான எண்ணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மக்கள் பல்வேறு படைப்புகளை கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.

அதிகமான தயாரிப்புகளை கொடுக்கும் பொழுது தான் நாடு வளர்ச்சி அடையும் என்று நம்புகிறேன். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது என்பது மாணவர் பருவத்திலேயே வரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு படைப்புகளை படைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வரும் பொழுது பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பார்கள். நாட்டிற்கான சேவைகளை அவர்களால் செய்ய முடியும்.இது போன்ற நிகழ்வுகளில் ஜெயிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அதில் பங்கேற்க வேண்டும் என்பதே முக்கியம். அதுவே அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முதல் படியாக இருக்கும்” என்றார்.

சமூக நவீனமைப்பு மாநாடு
சமூக நவீனமைப்பு மாநாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆளுநர், அமைச்சர் இணைந்து செயலாற்ற வேண்டும்: சமீப காலங்களில் ஆளுநர் பங்கேற்கும் கல்வி நிகழ்ச்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிக்கும் நிகழ்வுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது போன்ற நிகழ்வுகள் வருந்தத்தக்கது. இது போன்ற கல்வி நிகழ்வுகளில் இருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: இருவரும் பிறர்க்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இது போன்று நடைபெறவில்லை. அது அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான ஈகோ க்ளாஸ். இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருதி இருவரும் இணைந்து கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லும் பொழுது பெருமையாக இருக்கிறது.

இதையும் படிங்க: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா; ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆப்சென்ட்!

தரம் கேள்விக்குறியாக உள்ளது: அதே சமயம் அதிக எண்ணிக்கை மட்டும் போதாது. அதற்கான தரம் வேண்டும். 100 பேரை மோசமானவர்களாக கொண்டு சேர்ப்பதை விட 10 பேரை நல்லவர்களாக கொண்டு சேர்க்க வேண்டும். தரம் என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளது. ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அதை பாடியவர்கள் அல்லது ரெக்கார்டிங் மிஸ்டேக்காக இருக்கலாம். நீட் தேர்வு என்பது கட்டாயம் வேண்டும்.

நீட் தேர்வு: நீட் தேர்வு என்பது மிக முக்கியமான தேர்வு. எந்த படிப்பாக இருந்தாலும், அதற்கான ஒரு தரம் வேண்டும். நான் கல்லூரி படிக்கும் பொழுதும் நுழைவு தேர்வு இருந்தது. அதனால் தரமான இன்ஜினியர்கள் உருவானார்கள். தற்பொது தரமான இன்ஜினியர்கள் மோசமாக போய்விட்டார்கள். நுழைவுத் தேர்வு என்பது மிக மிக முக்கியம். அறிவு இருந்தாலும் மருத்துவ படிப்பிற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை பார்ப்பதற்காக தான் நீட் நுழைவு தேர்வு வைக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கை: நீட் தேர்வு இருந்தால் தான் இவ்வளவுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கப்படும். இந்த மதிப்பெண் இருந்தால் தான் அவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்று இருக்கும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் காசை பயன்படுத்தி மருத்துவம் பயில்வார்கள். தேசிய கல்விக் கொள்கையை இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டார்கள். அதன் நோக்கமே தகுதியுள்ள இளைஞர்களை 21ஆம் நூற்றாண்டுக்கு வேண்டிய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

அதற்கான சாராம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் பொழுது வருங்கால இளைஞர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் தேசிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்கள் தேவையானதை ஏற்றுக்கொள்ளலாம். தேவையில்லாததை விட்டு விடலாம் என கூறியுள்ளது. ஆனால் அதனை எதிர்த்து, வேண்டாம் என்பது அரசியல்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.