ETV Bharat / state

இது ஆரம்பம்தான் இனிதான் இருக்கு.. குட்டி கதையுடன் அட்வைஸ் செய்த உதயநிதி! - UDHAYANIDHI STALIN

பேரிடர் காலத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 6:34 PM IST

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பேரிடர் காலங்களில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் களப்பணியாளர்களுக்கு உதயநிதி உணவு பரிமாறினார்.

ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம்: இந்நிகழ்ச்சியின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக அனைத்து ஊடகங்களிலும் மழை குறித்தான பேச்சுகள் தான் இருந்தது. இந்த ஆண்டு மழை குறித்து முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேச்சு (Credits- ETV Bharat Tamil Nadu)

முக்கியமாக முதலமைச்சர் அனைத்து துறை அமைச்சர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு மழை பெய்தாலும் மூன்று மணி நேரத்திற்கு மேல் எங்கும் தண்ணீர் நிற்க கூடாது என உத்தரவிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம் அதன் விளைவாக நாம் இந்த மழையை நல்லபடியாக கையாண்டுள்ளோம். எப்போதும் இது போன்ற காலத்தில் எங்களுக்கு உறுதுணையாக களத்தில் இருப்பவர்கள் நீங்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

குட்டி கதையும் அட்வைஸூம்: தொடர்ந்து பேசிய உதயநிதி, “ஒரு குழந்தையை அம்மா காலையில் குளிக்க வைத்து, கிளப்பி வெளியே அனுப்பினால் அந்த குழந்தை ஆடி ஓடி விளையாடி சேறும் மண்ணுமாக மீண்டும் மாலையில் வீட்டிற்கு வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோவம் வரும் ஆனால் அது செல்ல கோவமாக இருக்கும்.

இங்கு அந்த குழந்தை சென்னைதான், அம்மாவாக தூய்மை பணியாளர்கள்கள் உள்ளனர். எனவே உங்களது பணி மற்றும் பொறுப்பால்தான் இன்று சென்னை 12 மணி நேரத்தில் மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. நீங்கள் அனைவரும் மீண்டும் இதே போன்று பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இதை நினைவு கூறும் வகையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.

செவிலிருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் உதயநிதி ஸ்டாலின்
செவிலிருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)

இது ஆரம்பம்தான் இனிதான் இருக்கு: இதில் மொத்தமாக 1280 பேருக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்படுகிறது. அதில் புடவை, கைலி, ரெயின்கோட், 5 கிலோ அரிசி, எண்ணெய், பால் பவுடர், மிளகாய் தூள் மற்றும் எதிர்பார்க்காத பரிசு தொகை ரூ. 2 ஆயிரம் இன்று வழங்கியுள்ளோம். இது முடிவு அல்ல இது தான் ஆரம்பம். எப்படி பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.