விழுப்புரம் : திண்டிவனம் அடுத்து ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூர் (ஆற்றின் குறுக்கே உள்ள (மைனர்) பாலம் பழுதடைந்துள்ளதால் அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் சென்று மீண்டும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்து வருவதை நேரில் சென்று பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உடனிருந்தார்.
பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி பொறுமையாக செல்ல வேண்டும் எனவும், ஓங்கூர் பாலத்தை மிதமான வேகத்தில் கடக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை