விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு (டிச. 30) முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்துவந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் 3.6 சென்டிமீட்டர் மழையும், மரக்காணம் செஞ்சி தலா 7 சென்டிமீட்டர், திண்டிவனம் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ள நிலையில் வீடூர் அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 32 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து இன்று (டிச. 31) காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் அணை மூடப்பட்டது.
இதே மாதத்தில் இன்று இரண்டாவது முறையாக அணை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்: ஆண்டாளிடம் ஆசிபெற்ற முதலமைச்சர் பழனிசாமி!