ETV Bharat / state

பொம்மையார்பாளையம் கடற்கரையில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு - Viluppuram district news

விழுப்புரம்: பொம்மையார்பாளையம் கடற்கரையில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கட்டடத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
கட்டடத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
author img

By

Published : Jan 6, 2021, 7:04 AM IST

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கடற்கரையில் மயிலம் பொம்மபுர ஆதீனம் பெயரில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொம்மையார்பாளையம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்டடம் கட்டும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "சென்னை நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள மணல் மேடுகளை கொண்டு கட்டடம் கட்டப்படுகிறது. இதனால் பேரிடர் காலத்தில் கடல் நீரானது கிராமத்திற்குள் புகும்" என்றனர்.

இதையும் படிங்க: புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.