ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியில் செல்ஃபோன் டவர் அமைக்க எதிர்ப்பு

விழுப்புரம்: குடியிருப்புப் பகுதியில் செல்ஃபோன் டவர் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

செல்போன் டவர்
author img

By

Published : Jun 24, 2019, 1:03 PM IST

விழுப்புரம் மாவட்டம், கிழக்குப் பாண்டிச்சேரி சாலையில் அமைந்துள்ளது அகரம் கிராமம். இக்கிராமத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தின் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டவர் அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதை தடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

Intro:விழுப்புரம்: கோலியனூர் அருகே தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Body:விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது சாலை அகரம் கிராமம். இங்குள்ள 700க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தின் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மைகுறைவு ஏற்படுவதோடு, விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Conclusion:மேலும் செல்போன் டவர் அமையும் இடத்துக்கு அருகே பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் இருப்பதால் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.