ETV Bharat / entertainment

எக்ஸ் பக்கத்தில் இருந்து திடீரென விலகிய விக்னேஷ் சிவன்... காரணம் என்ன? - DIRECTOR VIGNESH SHIVAN

Director vignesh shivan: பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி
விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 3:52 PM IST

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் எக்ஸ் சமூக இணையதள பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் 2012ஆம் ஆண்டு 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதனிடையே விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு உயிர், உலகு என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நயன்தாரா வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் தொடர்பான விவகாரத்தில் நயன்தாரா, நடிகர் தனுஷை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு ஆதரவளிக்கும் வகையில் விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷிற்கு எதிராக பதிவிட்டார்.

இந்த விவகாரத்தில் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்தனர். இது ஒருபுறம் இருக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் தொகுத்து வழங்கிய பான் இந்தியா இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் (Pan india Directors roundtable) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையும் படிங்க: திரைப்படமாக உருவாகும் "காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா"வின் வாழ்க்கை வரலாறு!

அப்போது நெட்டிசன்கள் பான் இந்தியா இயக்குநர்கள் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் பங்கேற்றது எப்படி என விமர்சித்தனர். இதனால் விக்னேஷ் சிவன் கோபமடைந்து தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விக்னேஷ் சிவன் எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகியது குறித்து காரணங்கள் எதுவும் கூறவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.