ETV Bharat / state

மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்! - Seventy year old Ellis Dam

விழுப்புரம் அடுத்து ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணை உடைந்த இடத்தில் 4ஆவது தடவையாக மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

author img

By

Published : Nov 8, 2022, 9:13 PM IST

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் எல்லீஸ் சத்திரம் அணைகட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை மழையின் காரணமாக அணை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏனாதிமங்கலம், எரலூர், செம்மார், பேரங்கியூர், கப்பூர், உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும் அவல நிலையில் உள்ளன.

மேலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளதால் மணல் குவாரி வேண்டாம் என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், மீண்டும் தற்போது எல்லீச்சத்திரம் அணை பகுதியில் நான்காவது முறையாக மணல் குவாரி அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்றம் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது, மணல் குவாரி அமைக்கவே கூடாது என்கிற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகக் கூறி கலைந்து சென்றனர். மீண்டும் மண் குவாரி அமைத்தால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துச் சென்றனர்.

மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

இதையும் படிங்க:வேலுமணி தாக்கல் செய்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.