ETV Bharat / state

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்.. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல கூடாது என மாற்று சமூத்தினர் நடத்திய போராட்டத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

author img

By

Published : May 26, 2023, 10:30 PM IST

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

விழுப்புரம்: கோலியனூர் அருகேவுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்கி வருகிறது. அதன் பின்னர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை சரிவர கோயிலின் பணிகளை செய்யாததாலும், கோயிலை பாதுகாக்காத நிலையானிலும் கிராம மக்களே கோயிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீ மிதி திருவிழா நடைபெற்றபோது, மேல்பாதி காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலின் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது, அவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது எனக் கூறி குறிப்பிட்ட ஒரு சில தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் கோயிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்யக் கூறி திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோயில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என பட்டியலின மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறிப்பிட்ட சமூகத்தினர் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தொடர்ந்து இரு பக்கமும் போராட்டங்கள் நீட்டிக்கவே, மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இரண்டு தரப்பினரிடையே இரண்டு முறையும் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் ஐந்து முறையும் சமாதான பேச்சு வார்த்தைக்கான கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கடைசியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

மேலும் சில தினங்களுக்குள் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை (மே 26) முதல் மீண்டும் பட்டியலின மக்கள் கோயிலுனுள் நுழைய எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் மாற்ரு சமூகத்தினர் பெண்கள் குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சமாதான பேச்சு வார்த்தைக்கான கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளத்து. இதனால் அங்கு அசாதரியாமான சூழல் நிகழாத வண்ணம் காவலுக்காக ஊருக்குள் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Marina beach:மெரினா கடற்கரை வரும் பொதுமக்களை துன்புறுத்தும் போலீஸார்: ஆதாரம் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.