விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணைக்கட்டு அதன் முழுக் கொள்ளளவான 32 அடியை எட்டியது.
தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் அணையிலிருந்து 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 கிராம விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்துவரும் சூழலில் நீர் வெளியேற்றம் அதிகரிக்கும் எனப் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடூர் அணை திறக்கப்பட்டதால் பொம்பூர், கணபதிப்பட்டு உள்ளிட்ட எட்டு கிராமங்களுக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... வீடுர் அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்: கரையோார மக்களுக்கு எச்சரிக்கை