விழுப்புரம் அருகேயுள்ள மடப்பட்டு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பாக்கியலட்சுமி. இவர் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்று (நவ.24) மடப்பட்டு பகுதிக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சென்றனர். அப்போது விஏஓ பாக்கியலட்சுமி சரவணனிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஓ பாக்கியலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகன ஆய்வாளரிடம் லஞ்சம் ஒழிப்புத் துறையினர் ரூ.1.69 லட்சம் பறிமுதல்!