ETV Bharat / state

அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு! - உளுந்தூர்பேட்டை விபத்து

விழுப்புரம்: உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ulunthurpettai accident
ulunthurpettai accident
author img

By

Published : Jan 20, 2020, 11:10 AM IST

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடிக்குச் சென்று தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால், எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதினார்.

இதையடுத்து ஐசக் காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். விபத்துக்குள்ளான காரும் அரசுப் பேருந்தும் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அதிகாலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும், அரசுப் பேருந்தின் பின்பகுதியிலும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்ப்பேட்டை விபத்து

இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே நின்றதால் சென்னை-திருச்சி நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு

Intro:tn_vpm_02_ulunthurpettai_accident_4person_death_vis_tn10026.mp4Body:tn_vpm_02_ulunthurpettai_accident_4person_death_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் அரசு பேருந்து பயணம் செய்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்தில் வந்த பயணிகள் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தனது காரில் தூத்துக்குடிக்கு சென்று திருமண நிச்சயதார்த்த முடித்துவிட்டு மீண்டும் அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார் இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது பின்னால் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால் கவனக்குறைவு காரணமாக எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதியது இதையடுத்து ஐசக் ஐயா காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் விபத்துக்குள்ளான கார் அரசுப் பேருந்தும் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தனர் அதிகாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் சொகுசு பேருந்து அதி வேகமாக வந்து சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதி பின்னர் அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த கல்வி அதிபர் அரக்கோணம் ஐசக் ஐயா மற்றும் அறந்தாங்கி சேர்ந்த வெள்ளைச்சாமி காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்குணம் ஆகிய மூன்று பேர் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தில் உயிரழந்த நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே கிடந்ததால் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது இந்த விபத்து பற்றி உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.