விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகவேல் (16), மோகன் (21). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மரக்காணம் அருகேயுள்ள தீர்த்தவாரி கடல் பகுதியில் சக நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி முருகவேல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். முருகவேலைக் காப்பாற்றச் சென்ற மோகனும் கடலில் மூழ்கி மாயமானார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து காவல் துறையினர், கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். காவலர்களுடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் படகுகள் மூலம் மாயமான இளைஞர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாயமான இளைஞர்களின் உடல் இன்று முட்டுக்காடு மீனவர் கிராமப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இதையும் படிங்க:கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மாயம்...!