கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள தேவரடியார்குப்பம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயபாரதி (20), மெயின்ரோடு பகுதியைச் சேரந்த சுப்பிரமணி என்பவரது மகன் அஜித் (20) மற்றும் நடுத்தெருப் பகுதியைச் சேர்ந்த தங்கரசு என்பவரது மகன் ரகுபதி (20) ஆகியோர் ஒரே இருசக்கரவாகனத்தில், மணலூர்பேட்டையிலிருந்து தேவரடியார்குப்பம் நோக்கி அசுர வேகத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, வளைவு சாலையில் வாகனத்தை திருப்பமுடியாமல் நேராக மரத்தின் மீது மோதினர். இவ்விபத்தில் அஜித், ஜெயபாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரகுபதிக்குத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்த மணலூர்பேட்டை காவலர்கள், விபத்தில் உயிரிழந்த அஜித், ஜெயபாரதி ஆகிய இருவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு