விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தைச் சேர்ந்த ஒலக்கூர், பிரம்மதேசம், மைலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக இரவு நேரங்களில் வீடு புகுந்து செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் செல்வதாகப் புகார்கள் வந்தவண்ணம் இருத்தன. பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களின் செல்போனை தொடர்பு கொண்டபோது, செல்போனை திருடிய நபர் பணம் கொடுத்தால் செல்போனை திரும்பக் கொடுத்து விடுவதாகப் பேரம் பேசியும், ஆபாசமாகப் பேசுவதாகவும் புகார் வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திண்டிவனம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கணகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அதன் அடிப்படையில் ஆட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அய்யனார், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் சுதாகர் என்பவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் வீடுகளில் புகுந்து செல்போனகளை திருடிதையும், ஆபாசமாகப் பேசியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 32 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகள் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மத்திய ரயில் நிலையத்தில் செல்ஃபோன் திருடியவர் கைது!