விழுப்புரம்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இன்று (ஜன.24) விழுப்புரத்தில் இருந்து சின்னமடம், திருவக்கரை, திருக்கனூர், பூவரசன்குப்பம் உள்ளிட்ட இயக்கப்படாத வழித்தடங்களில் இரண்டு மினி பேருந்து உள்பட ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் லஷ்மணன், பயணிகளோடு பயணியாக பயணித்து இந்நிகழ்வை தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடனிருந்தார்.
இதையும் படிங்க: மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை!