நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 490 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுதோறும் 10 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலைகளை சீரமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எப்படி சரியாகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.