கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில், திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையைச் சேர்ந்தவருமான குமரகுரு வழங்கினார்.
அதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்த குழுவினர் தமிழ்நாட்டில் திருப்பதி கோயிலைக் கட்டுவதற்காக திருச்சி ரோட்டில் உள்ள நிலங்களைப் பார்வையிட்டனர்.
இதில் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த 8 பேர் குழு இந்த ஆய்வில் பங்கேற்றனர். மேலும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஸ்டேக் முறை அமல் - குறைந்தது போக்குவரத்து நெரிசல்