திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி விழுப்புரத்திலிருந்து டிசம்பர் 10, 11ஆம் தேதிகளில் காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டனை வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 11 மணிக்குச் சென்றடையும்.
பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் மீண்டும், அதே வழித்தடம் வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தை மதியம் 3 மணிக்கு வந்தடையும்.
இதேபோல் டிசம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 11.30 மணிக்குச் சென்றடையும். மீண்டும் டிசம்பர் 10, 11, 12 ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.15 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் 5 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் இருந்து டிசம்பர் 9,10ஆம் தேதிகளில் இரவு 8.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.
பின்னர் திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு போளூர், ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்குச் சென்றடைகிறது.
வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து 10,11ஆம் தேதிகளில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை நிலையத்தை அதிகாலை 2 மணிக்கு வந்துசேரும்.
பின்னர் அங்கிருந்து 3.05 மணியளவில் புறப்பட்டு மீண்டும் அதே வழித்தடம் வழியாக திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை அதிகாலை 5.55 மணிக்குச் சென்றடைகிறது.
இதையும் படிங்க: மும்பைக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் நாமக்கல் வழியாக செல்லும்!