கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
எனவே திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக தென்பெண்ணையாறு விளங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தால் சூழ்ந்த கீழ்பேரடிக்குப்பம்