விழுப்புரம்: வானூர் தொகுதி, ஐவேலி கிராமத்தை சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் சுந்தர் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பொக்லைன் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். கடந்த சுந்தர் மே14ஆம் தேதி சவுதி அரேபியாவில் மாரடைப்பால் உயிர் இழந்தார்.
அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உதவியோடு, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை நலன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானின் தொடர் முயற்சியால், ஜூன்19ஆம் தேதி சுந்தரின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த சுந்தருக்கு கவிதா என்ற மனைவியும்,ஜெயராஜ் என்ற நான்கரை வயது, பவிச்சரண் என்ற ஒன்றரை வயது குழந்தைகள் உள்ளன.
சவுதி அரேபியாவில் உயிரிழந்த சுந்தரின் வீட்டிற்கு அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.25,000 நிதி வழங்கினார். சுந்தரின் மனைவி கவிதாவிற்கு அரசு வேலை கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து உயிரிழந்த சுந்தரின் மனைவி கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை கூட்டாளியுடன் கொலை செய்த காதலன்