நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் பகுதியில் நேற்று(நவ.22) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் இரண்டாவது நாளாக கைது செய்தனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அப்போது கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த தொண்டர்கள் கும்மியடித்து கிராமிய பாடல்களை பாடினர். இதனை அங்கிருந்த திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி ஆகியோர் வெகுவாக ரசித்தனர்.