விழுப்புரம்: சட்ட மாமேதை அம்பேத்கரின் 131ஆவது பிறந்த நாள் நேற்று (ஏப். 14) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அன்னதானம், ஊர்வலம், பொதுக் கூட்டம் என்று விமர்சையாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணி மனை எதிரே கட்டப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு மகளிர் பறை இசை நடனங்களுடன் ஊர்வலமாக மாலை எடுத்துவந்து அணிவித்தனர்.
இதையும் படிங்க:அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாள்: அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை