விழுப்பரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2014ஆம் ஆண்டு தாய் தந்தையை இழந்த பின் திருப்பத்தூரில் உள்ள தனது மாமாவான நசீர் அஹமத் வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில் தனது மாமா தன்னிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக சிறுமி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நேற்று (அக்.06) வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வம், நசீர் அஹமத் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 6000 அபராதமும் விதித்து தீர்பளித்தார்.
இதனையடுத்து நசீர் அஹமத் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.