ETV Bharat / state

பஸ் ஓட்ட தெரியாதுங்க.. நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்த தற்காலிக ஓட்டுநர்..! - உளுந்தூர்பேட்டை

Temporary Bus Driver: போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் அரசு பேருந்து தற்காலிக ஓட்டுநரைக் கொண்டு இயக்க முயன்ற போது ஓட்டுநருக்குப் பேருந்து சரி வர ஓட்ட தெரியாததால் வழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

temporary-driver-the-bus-stopped-on-the-way-because-the-workers-of-the-transport-corporation-are-on-strike
பஸ் ஓட்ட தெரியா துங்க.. நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்த தற்காலிக ஓட்டுநர்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 9:20 PM IST

Updated : Jan 9, 2024, 9:39 PM IST

பஸ் ஓட்ட தெரியாதுங்க.. நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்த தற்காலிக ஓட்டுநர்..!

விழுப்புரம்: போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறைக்காக தங்களின் சொந்த ஊருக்கு செல்லவிருக்கும் பயணிகள் பலர் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் பாதுகாப்புடன் சில பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பல பேருந்துகளில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இவர்கள் தினசரி வாடகை வாகனங்களை இயக்கம் ஓட்டுநர்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பணிமனையிலிருந்து சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் பேருந்தின் இயக்கம் குறைந்து காணப்படுவதால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஊந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் நகரப் பேருந்து தடம் எண் 16 என்ற பேருந்தை ஊந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநரை வைத்து பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

அப்போது, பணிமனையில் இருந்து சிறிது தூரம் ஓட்டி வரப்பட்ட பேருந்து ஒரு வளைவில் திரும்பும்போது கீயர் போடத் தெரியாததால் அந்த தற்காலிக ஓட்டுநர் அதே இடத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். இந்த தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அந்த பேருந்து ஓட்டிச் செல்லுமாறு ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அதற்கு மினி டெம்போ ஓட்டும் எனக்குப் பேருந்தை ஓட்ட முடியவில்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் செல்லக்கூடிய அந்த நகரப் பேருந்து மீண்டும் பணிமனைக்கே ஓட்டி செல்லப்பட்டது.

மேலும், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் அரசு பேருந்து தற்காலிக ஓட்டுநரைக் கொண்டு இயக்க முயன்ற போது ஓட்டுநருக்குப் பேருந்து சரி வர ஓட்ட தெரியாததால் வழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: துணை வேந்தர் நியமனத்திற்கான அறிவிப்புகளை திரும்ப பெற்ற ஆளுநர் மாளிகை.. திடீர் மனமாற்றம் ஏன்?

Last Updated : Jan 9, 2024, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.