விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை ரூ. 40 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ஐந்தாயிரமாக நிர்ணயம் செய்யக்கோரியும், 2017-18ஆம் ஆண்டுக்கான கரும்பு பயிருக்கான காப்பீட்டு அனைவருக்கும் வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று (செப்டம்பர் 5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.