விழுப்புரம்: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை குழு விழுப்புரம் நகராட்சி பாகர்ஷா வீதி , மகாத்மா காந்தி ரோடு , கிழக்கு பாண்டி சாலையில் உள்ள மாம்பழ குடோன்கள் மற்றும் பழ விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் சுமார் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த ஆய்வில் 15 கடைகள் மற்றும் 5 குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது. மேலும் 5 கடைகளுக்கு தலா ரூ. 2000/- வீதம் ரூ 10,000/-அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயற்கையாக பழங்களை பழுக்க வைக்க கூடாது எனவும், இயற்கையான முறைகளை பின்பற்றி பழங்களைப் பழுக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் , இதுபோன்ற ஆய்வுகள் மாவட்ட முழுவதும் தொடரும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சிக்கன் ஷவர்மாவிற்கு தடை; அதிர்ச்சிக் கொடுத்த நகராட்சி