விழுப்புரம்: ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 270 ரூபாயை முழுமையாக வழங்குவதில்லை என்று கூறி தூய்மை பணியாளர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி ஆணையர் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் மூன்று உயர் ரக நாய்களின் பராமரிப்பு பணிகளை பார்க்குமாறு தங்களை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேற்கண்ட பணிகளை செய்ய தவறினால் தங்களை மிரட்டும் தோணியில் பேசுவதாகவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: இது இந்துக்கள் நாடு: திமுக எம்.பி. ஆ.ராசா கருத்து ஏற்புடையது அல்ல! - பிரேமலதா விஜயகாந்த்