விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே உயரமான 27 அடி சனிபகவான் சிலை அமைந்துள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை 5.22 மணியளவில் சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். சனிப்பெயர்ச்சி தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்பட்டன.
கடந்தாண்டு சனிப்பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு குறைவான பக்தர்களே பங்கேற்றனர்.
சனிப்பெயர்ச்சி பூஜைகள் மட்டுமின்றி, கோயிலில் உள்ள மற்றொரு 12 அடி சனிபகவான் சிலைக்கு 44 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்யப்படுகிறது. உலக நன்மைக்காகவும், கரோனா போன்ற தொற்றிலிருந்து விடுபடவும் பிரார்த்திக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.