விழுப்புரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். பாஜக மாநில பொறுப்பாளரான இவர் இன்று (ஆக22) தனது வீட்டருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை வழிபாட்டுக்காக வைத்திருந்தார்.
இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் காவல் துறையினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர், ‘இந்துக்கள் பண்டிகைக்கு தடை விதிக்கும் அரசுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும் நல்ல புத்தியை கொடு விநாயகா" என வேண்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதையும் படிங்க:'ஆயுஷ் அமைச்சக செயலரின் இந்தி வெறியை தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும்'