ETV Bharat / state

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் - ceased by police

விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்
author img

By

Published : Jul 19, 2019, 12:07 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமைக் காவலர் இந்திரஜித் ஆகியோர் ரங்கநாதபுரம் கூட்டுசாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.

மேலும் அந்த வாகனத்தில் அண்டை (பாண்டிச்சேரி) மாநில மது பாட்டில்கள் 60 பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், மாத்தூர் திருக்கை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைக் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர்.

கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் தலைமைக் காவலர் இந்திரஜித் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Intro:விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே புதுச்சேரியிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமை காவலர் இந்திரஜித், ஆகியோர் ரங்கநாதபுரம் கூட்டுசாலை அருகில், இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த TN-59-AJ-9678 பதிவு எண் கொண்ட Tata பிக்கப் நான்கு சக்கர வாகனத்தை சோதனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அந்த வாகனத்தில் அந்நிய (பாண்டிச்சேரி) மாநில மது பாட்டில்கள் 60 பெட்டிகளில் 2,880 இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விழுப்புரம் மாவட்டம் மாத்தூர் திருக்கை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கபிரிவில் ஒப்படைத்து வழக்கு பதியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 1.50 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.
Conclusion:மேற்படி கடத்தல் பொருட்கள் மற்றும் கடத்தல் வாகனத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிறப்பாக பணிபுரிந்த வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் தலைமைக் காவலர் இந்திரஜித் ஆகியோருக்கு சிறப்பாக பணி செய்தமைக்காகபாராட்டு தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.