விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா (எ) காஜா, வினோத். இவர்கள் இருவர் மீதும் தலா ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு கணபதி நகரில் உள்ள லாலி கார்த்திக் வீட்டுக்குச் சென்று கூட்டாக மது அருந்தியுள்ளனர். அப்போது, எதிர்ப்பாரதவிதமாக மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாலி கார்த்திக்கும், வினோத்தும் அரிவாளால் காஜாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பின்னர், பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டுக்குள் பார்த்தபோது ரவுடி காஜா வெட்டுகாயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து, உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, கொலையாளிகள் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரியில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு