விழுப்புரம் அருகேயுள்ள காணை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் விழுப்புரம்!