தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்களுக்கு, கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வரப்படுகின்றன.
எனவே நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நெகிழிக் கழிவுகளுக்கு பதில், இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக, விழுப்புரம் மாவட்ட பசுமைத் தாயகம் சார்பில், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இரண்டு கிலோ நெகிழிப் பொருட்களுக்கு, ஒரு கிலோ இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இலவச அரிசியை வழங்கினார்.
இதையும் படிங்க:
ரகசிய அறையில் புதுச்சேரி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை: ஒருவர் கைது!