ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதியை ஒருமையில் தாக்கிய சி.வி.சண்முகம் எம்.பி! - உதயநிதி ஸ்டாலின்

திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஒருமையில் கடுமையாகப் பேசி விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் தாக்கிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்!

author img

By

Published : Jul 25, 2022, 7:46 PM IST

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய சி.வி.சண்முகம், “இது விடியல் அரசு அல்ல; விடியா மூஞ்சி அரசு. ஒரே குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமா? தமிழ்நாட்டின் சொத்துகளைப் பறிக்க வேண்டுமா? நாங்கள் ஓராண்டு கால சாதனையைப் பற்றி கேட்கவில்லை. அவர்கள் தேர்தலுக்காக கொடுத்த 525 வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?

வீடுதோறும் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கொடுப்போம் எனக் கூறினீர்களே, அதை இப்பொழுது வரை கொடுத்தீர்களா? ஆட்சிக்கு வந்தவுடன் வங்கியிலே அடமானம் வைத்துள்ள தங்க நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலினும், அவருடைய மகன் இளவரசர் பட்டம் சூட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலினும் வாக்கு சேகரித்தார்கள்.

இதனை நம்பி 50 லட்சம் குடும்பத்தாய்மார்கள் தங்களுடைய நகை மட்டுமல்லாது, பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்களின் நகைகளை வாங்கிக்கொண்டு வங்கிகளில் அடமானம் வைத்தனர். தற்போது 15 லட்சம் குடும்ப நபர்களுக்கு மட்டுமே தங்க நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 35 லட்சம் குடும்ப நபர்களின் நிலைமை என்ன? உங்கள் வாக்குறுதியின் நம்பகத்தன்மை இதுதானா? ஸ்டாலின் பேச்சைக்கேட்டு நடுரோட்டில் தாய்மார்கள் நிற்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 16 ரூபாய்க்கு விலை குறைப்பு செய்துள்ளது. சிறிய பகுதியான புதுச்சேரி மாநிலம் பெட்ரோல், டீசல் மீதான விலைக்குறைப்பு செய்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் தாக்கிய சி.வி.சண்முகம் எம்.பி!

ஏன் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீது விலை குறைப்பு செய்யவில்லை என்று கேள்வி கேட்டால், மத்திய அரசு விலையை ஏற்றுகிறது. நாங்களும் ஏற்றுகிறோம் என்று முதலமைச்சர் கூறுகிறார்” என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி எப்போது வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.