மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும்; விழுப்புரத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று (டிச. 04) ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையில் மார்க்., கம்யூ. கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதற்காக விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.இதையும் படிங்க: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த அமைச்சர்!