ETV Bharat / state

பாமக புத்தாண்டு பொதுக்குழுத் தீர்மானங்கள்! - PMK Committee Meeting 18 Major Resolutions

விழுப்புரம்: தமிழ்நாட்டில் என்.ஆர்.சியை அமல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட 18 முக்கியத் தீர்மானங்கள் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Villupuram PMK Committee Meeting
Villupuram PMK Committee Meeting
author img

By

Published : Jan 1, 2020, 3:48 AM IST

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் நடைபெற்றது. பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் 18 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மான விவரங்கள்:

1. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

2. தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.

3. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

4. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு தேவை.

5. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

6. தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

7. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

8. காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

9. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்.

10. புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையைப் பிரகடனம் செய்க.

11. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

12. தமிழ்நாட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை.

13. படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

14. புதிய மாவட்டங்களை உருவாக்கக் குரல் கொடுத்து வெற்றி பெற்ற பாமக நிறுவனர் ராமதாஸூக்கு நன்றி.

15.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

16. உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி அமைய வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

17. புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்கச் சட்டம் இயற்ற வேண்டும்.

18. 2020ஆம் ஆண்டை அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படையை வலுப்படுத்தும் ஆண்டாக கடைபிடிக்க உறுதி என்பன உள்ளிட்ட 18 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

நெகிழிக் கழிவுகளை கலைப்பொருள்களாக மாற்றும் கல்பனா!

Intro:விழுப்புரம்: தமிழகத்தில் என்.ஆர்.சியை அமல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட 18 முக்கிய தீர்மானங்கள் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.Body:பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் இன்று நடைபெற்றது.

அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மான விவரங்கள்:

1. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

2. தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

3. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

4. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு தேவை.

5. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

6. தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

7. தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

8. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

9. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்.

10. புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க.

11. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

12. தமிழ்நாட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை.

13. படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

14. புதிய மாவட்டங்களை உருவாக்க குரல் கொடுத்து வெற்றி பெற்ற பாமக நிறுவனர் ராமதாஸூக்கு நன்றி.

15.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்.

16. உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி அமைய வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

17. புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

18. 2020 ஆம் ஆண்டை அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படையை வலுப்படுத்தும் ஆண்டாக கடைபிடிக்க உறுதி.Conclusion:என்பன உள்ளிட்ட 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.