விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஐந்து குடோன்கள் உள்ளன. அதில் ஒன்று வியாபாரிகள் பயன்படுத்தும் பல்லடுக்கு சேமிப்பு கிடங்கு மற்ற நான்கு குடோன்களும் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் எடை போடப்படும்.
ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் இந்த மூன்று சேமிப்பு கிடங்கிளிலும் வைத்துள்ளதால் வேறுவழியின்றி திறந்தவெளியில் விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை இறக்கி வைத்தனர். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) காலை பெய்த மழையால் அனைத்து மூட்டைகளும் நனைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழை காலத்தில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில், அரசு ஒரு நிரந்திர முடிவு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.