விழுப்புரம்: ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் செல்லப்பன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோயில் பகுதியிலிருந்து 63 சிலிண்டர்களை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த, ஆக்சிஜன் சிலிண்டர்கள் சாலையில் சிதறி விழுந்தது. இதனால் சிலவற்றில் இருந்து ஆக்சிஜ் வீணாக வெளியேறியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் விபத்து ஏற்பட்ட வாகனத்தை மீட்டனர். மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.