விழுப்புரம், மாவட்டம் செஞ்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்து கொண்டு கல்யாண சீர்வரிசை மற்றும் தென்னை மரக்கன்றுகளை ஒரு சிலருக்கு மட்டும் மேடையில் கொடுத்து முடித்து விட்டு மேடையிலிருந்து கீழே சென்றார்.
பிறகு பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சீர்வரிசை பொருட்கள், தென்னை கன்றுகள் மற்றும் அரிசி ஆகியவற்றை முண்டியடித்துக்கொண்டு அள்ளிச் சென்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கான சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்திருந்த நிலையில், பிரியாணியை பொதுமக்கள் பக்கெட் மற்றும் பாத்திரத்தில் தாங்களாகவே எடுத்துக்கொண்டனர். பிரியாணி முறையாகச் செய்வதற்கு முன்னதாகவே அள்ளிச் சென்றனர்.
மேலும் ஒரு சிலர் கல்யாண சீர்வரிசை பொருட்கள் அடங்கிய பீரோவை தலையில் தூக்கிக்கொண்டு கரும்பு தோட்டத்திற்குள் மறைந்த நிகழ்வும் நடைபெற்றது.
இதையும் ப்படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்வது தேவையற்ற வாதம் ! - அமைச்சர் சிவசங்கர்