கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து, ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் (66), என்பவரும் அவருடைய நண்பரும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த நண்பரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி