விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மங்கலம்கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (49). கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிலிருந்த 19 கிராம் எடையுடய தங்க நகைகள், 60 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருள்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத சிலர் திருடியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திவந்தனர்.
தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பல்லாவரம், திரிசூலம் கல்லறை தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (26) என்பவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். இந்த, விசாரணையில் ஆறுமுகம் வீட்டில் கதவை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 14 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஹரியானாவில் 4.5 கிலோ போதை பொருள் கடத்தல்