விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் ஹேமலதா, மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக, பாடத்திட்டங்களை அனிமேஷன் மூலம் வடிவமைத்து அதனை பென்டிரைவ்களில் ஏற்றி இலவசமாக மாணவர்களுக்கு அளித்து வந்துள்ளார். பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தினந்தோறும் மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாக உரையாடி கல்வி கற்றலை மேம்படுத்தி உள்ளார். இவர், குறித்து பிரதமர் மோடி இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.
இதுகுறித்து ஆசிரியர் ஹேமலதா கூறுகையில், பிரதமர் தனது பணியை அங்கீகரித்து பேசியது பெரும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாகவும், இது ஆசிரியர் சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனதின் குரல்: தூத்துக்குடி முடிதிருத்தும் தொழிலாளியிடம் தமிழில் பேசிய பிரதமர்